தமிழர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் திருநாள் மற்றும் இந்திரவிழா கொண்டாட்டம்



கொஞ்சம் சிந்திப்போமா? அப்பா... இன்னைக்கு தமிழ்ப் புத்தாண்டாப்பா?
ஏஞ்சாமி! அப்படி கேக்குற...
இல்லப்பா... டிவியில எல்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்றாங்களே... அதான் கேட்டேன்...
என்னன்னு சாமி சொல்றாங்க... சுபகிருது ஸ்ரீ தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொல்றாங்கப்பா...
சுபகிருது ஸ்ரீ என்பதே தமிழ்ச் சொல் இல்லையே செல்லம்...
சுபகிருதுன்னா என்னப்பா அர்த்தம்...?
சுபகிருதுன்னா (நற்செய்கை) அர்த்தம் சாமி...

அப்ப போன வருஷத்துக்கு என்னா பேருப்பா...
அதுவா சாமி... பிலவ பேருப்பா...

அதாவது தமிழ்ச்சொல்லாப்பா....
இல்லடா கன்னுக்குட்டி... அதுவும் தமிழ்ச்சொல் இல்ல... அதுமட்டுமில்ல... அறுபது வருஷத்தோட பேரு எதுவுமே தமிழ்ச்சொல் இல்ல சாமி...?
ஒரு பேரு கூட தமிழ்ல இல்லன்னா அப்புறம் எப்படிப்பா அது தமிழ்ப் புத்தாண்டு?
நல்ல கேள்வி சாமி... இப்படித்தான் கேள்வி கேட்கணும்... கேள்வி கேட்டாத்தான் சிந்திப்போம்... உண்மை எது? பொய் எதுன்னு யோசிப்போம்... வெறுமனே எங்களோட நம்பிக்கை இது... முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை...
அப்ப இன்னைக்கு எந்தப் பண்டிகையும் இல்லையாப்பா...
இருக்கே... முன்னையெல்லாம் கோடைமழை பெஞ்சதும் வேளாண்மை செய்ய நிலத்தை உழுவாங்க...
அப்படி செய்வதற்கு "பொன்னேர் பூட்டுதல்"ன்னு பேரு.
அப்புறம் அறுவடை முடிந்த மகிழ்ச்சியில சித்திரை முழுநிலவு காலத்துல இந்திரவிழா கொண்டாடுவோம்...
ரொம்ப நாளைக்கு முன்னாடி இங்க உள்ளே நுழைஞ்ச சிலர் தங்களோட வசதிக்காக யாரும் சீக்கிரம் கேள்வி கேட்கக் கூடாதுன்னு சாமி விஷயம்... கடவுள் நம்பிக்கைன்னு அதையும் இதையும் உள்ள நுழைச்சு நாம கும்புட்டு இருந்த சாமிக்குள்ள அவங்க சாமியை சேத்து கதையை எழுதி கடைசியில எது உண்மைன்னே தெரியாத மாதிரி கலந்து குழப்பிட்டாங்க...
அப்ப இன்னைக்கு நாம என்னப்பா கொண்டாடலாம்?
நாம இதை சித்திரைத் திருநாள்ன்னு கொண்டாடலாம்...
பொன்னேர் பூட்டுதல்ன்னு கொண்டாடலாம்...
ஏன் இந்திர விழான்னு கூட கொண்டாடலாம்...
சித்திரை மாத இரவுகளில் வானம் மிகத் தெளிவாக பேரொளியுடன் விளங்கும். நிலவு காயும். அறுவடை முடிந்த மகிழ்வில் அக்கால உழவர் பெருமக்கள் களிப்புடன் கொண்டாடி மகிழும் காலம் இது.
மருத நிலத்தின் தெய்வமான இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆற்றங்கரைகளில் "இந்திர விழா" நடைபெற்றன என்று பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.


இன்னும் ஆராய்வோமா ?
புதியது பழையவை

نموذج الاتصال