நம்பிக்கை!
நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிலர் குறை கூறுவதற்கென்றே பிறவி எடுத்து இருக்கின்றார்கள். அவர்களைப் பற்றியும், அவர் கருத்துக்களைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டே இருங்கள். நாம் பரபரப்பாக இருந்தாலேபாதி சோகம் கண்ணுக்குத் தெரியாது. சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது.
சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் அதிகம் அவமானமும் அதிகம் இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே காலத்தாலும் வீழ்த்த முடியாத வரலாறு படைக்க முடியும்.
அதாவது நீச்சல் செய்ய முடியாதவர்களால் எப்படி நீரோட்டமுள்ள ஆற்றைக் கடக்க முடியாதோ அதுபோல முயற்சி செய்ய முடியாதவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
ஆகையால் முயற்சி செய்யுங்கள் முள்ளும் மலராகும் விமர்சனம் கூட ஒரு நாள் விருந்தாகும்.
நம்பிக்கை உடையவர்களுக்கு தோல்வி ஒரு தொடக்கம், நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தோல்வி ஒரு முடக்கம்.
துணிந்து தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள், வெற்றி வரும் வரை.
விடியாத பொழுதும் இல்லை, முடியாத செயலும் இல்லை.