சித்தர்களின் வானியல், அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்பு

பண்டைக்காலத்தில் ஆன்மீக வழி வாழ்ந்த அதிசய மனிதர்கள். மனிதர்யாவரும் ஆறறிவு உடையோர் என்பது யாவரும் அறிந்ததே. எமது புலன்களால் உணரப்பட முடியாத பல பொருட்கள், காட்சிகள், நிகழ்வுகள் என்பன எம்மைச் சூழ இருக்கின்றன. இவை யாவும் எமக்குப் புலப்படாமல் விட்டாலும், இவற்றை எல்லாம் நம் முனிவர்கள் முழுவதும் அறியக் கூடிய ஆற்றல் கொண்டு இருந்தார்கள் என்று நம்புவதற்கு, அவர்கள் விட்டுச் சென்ற, மதிநுட்பம் மிக்க ஆக்கங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன. அவற்றில் தற்போதைய விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்கள்: தியானம்: தியானமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாய் விளங்குகிறது. மனிதனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சக்தியினை கூரிய, ஆழ்ந்த தியானம் மூலம் வெளிக்கொணர்ந்து, அதன் பயனால் பேரானந்தமான வாழ்க்கை வாழலாம். மனம் குவிந்த தியானம் மூலம், பிணி, திரை, மூப்பு, மன அழுத்தம், ஏக்கம், கவலை, இரத்த அழுத்தம், கொழுப்பு, உஷ்ணம், சோர்வு முதலியவை நீங்கி, புத்துணர்ச்சி, அமைதி, சந்தோசம் அதிகரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் மூளைக் கலங்கள் விழித்தெழுந்து , புதிய கலங்கள் உருவாகி, அக, புற அறிவுஞானம் பெருகி, நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். என்று எழுதி வைத்தார்கள். யோகக்கலை: உடலில் உள், வெளி உறுப்புகள் யாவற்றினதும் நுண்ணிய அமைப்புகள், நுணுக்கமான செயற்பாடுகள், சிக்கலான வலைத்தொடர்புகள் பற்றி மிகவும் ஆழமாகவும், துல்லியமாகவும் சரியாகக் கண்டறிந்து, ஒவ்வொரு உறுப்பிற்கும் வந்திருக்கும், வரவிருக்கும் வியாதி எதுவானாலும் தீர்க்கவும், தடுக்கவும் ஆயிரக்கணக்கான, இலகுவான யோகாசனம், பிரணாயாமம், முத்திரைகள், அப்பியாசங்களைக் கண்டுபிடித்தார்கள். இதை முறைப்படி செய்தால், உடலின் மூட்டுகள். நரம்புகள், சுரப்பிகள், இரத்தம் செப்பனிடப்பட்டு, ஆரோகியமான உறுப்புகளோடு, வலிமை, வீரியம், அழகு பெருகி நீண்ட ஆயுள் பெறலாம். வான சாஸ்திரம்: சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிவற்றின் நிலைகள், சஞ்சாரங்கள், வேகங்கள் ஆகியவற்றை மிகவும் சரியாகக் கணித்தார்கள். அண்டவெளி ரகசியம்: மேல்நாட்டவர் சோதிட முறையில் சூரிய குடும்பம் நிலையாய் உள்ளது என்று வைத்து நேரம் கணக்கிட, அவர்கள் முழு அண்டமுமே தொடர்ந்து அசைந்து கொண்டிருப்பதை அறிந்து, இன்னும் ஒரு படி மேலே சென்று நட்சத்திர மண்டலத்தை அடிப்படையாய் வைத்து நேரம் கணக்கிட்டார்கள். கிரகம் வக்கிரகித்தல்: நீள் வட்டப் பாதியில் செல்லும் கிரகங்கள், ஒரே திசையில் செல்லும்போது, சில சமயம், விரைவாகச் செல்லும் வெளிக்கிரகம் உட்கிரகத்திலும் பார்க்கக் குறைந்த வேகத்தில் நகருவது போலத் தோன்றி, அது பின் பக்கமாய்ப் பயணிப்பதாக எமது கண்ணுக்குப் புலப்படும். இதைக்கூடி அவர்கள் கண்டு பிடித்தார்கள். பூமி தளம்புதல்: பூமியின் அச்சு ஒரே கோணத்தை நோக்காது, அது படிப்படியாகத் தளம்பி, 13245 வருடத்தில் ஒரு வட்ட ஒழுக்கினை முடிக்கின்றதாம். மருத்துவம்: சித்த, ஆயுவேத முறைகளினால் இயற்கைமுறையில் எந்த நோய்க்கும் மருத்துவம் கண்டார்கள். விமானம்: பண்டைக் காலத்தில் விமானம் இருந்ததோ, கற்பனையோ; ஆனால், விமானம் ஒன்றைச் செய்வது எப்படி என்று வரிபட, செய்முறை, ஓட்டுமுறை விளக்கங்கள் சம்ஸ்கிருத நூல்களில் இருக்கின்றன. சங்கீத ஞானம்: எழு சுரங்களின் ரீங்கார ஒலிகள், சங்கதிகள் என்பன பற்றி, சாமவேதம் முதலிய நூல்களில் ஏராளமாக எழுதப்பட்டு இருக்கின்றன. மாய மெய்மை: நாம் தற்போது வென்றுவரும் இந்த நுட்பம் அவர்கள் அன்றே கண்டு விட்டனர். மேலும் தற்போதைய விஞ்ஞானிகளால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டும், இன்னமும் நடைமுறைக்கு கொண்டுவர இயலாத தத்துவங்கள்: திரிகால ஞானம் : அக்கால முனிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காலத்தை வென்றார்கள். உருவாக்குதல்: தமது சக்தியினால் நினைத்த எந்தப் பொருளையும் உருவாக்கினார்கள் - சிந்தனா சக்தி பிறர் மனதறிதல்: அவர்கள் முன் எவரும் பொய் சொல்ல முடியவில்லை. கூடு விட்டுக் கூடு பாய்தல்: விரும்பிய போது விரும்பிய உடலை எடுத்தார்கள். நீர் மேல் மிதத்தல்: குறிப்பிட்ட சில மூச்சு யோகப்பயிற்சி அவர்களுக்கு நீரில் மிதக்கும் ஆற்றலைத் தந்தது. ஆயுள் விருத்தி: அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்களாம். இவர்கள், 5000 வருடங்களுக்கு முன்பே, யவன, பபிலோனிய, பாரசீக, சீன நாகரீகங்களின் தொடர்பு எதுவும் இன்றி, ஒதுக்குப்புற ஆச்சிரமங்களில் இருந்தபடி, ஆன்மிக நாட்டம் மட்டுமே உடையவர்களாய், இக்கால மனிதரே தமது மண்டைகளை உடைத்துக் கொண்டு இருக்கும் சிக்கலான பல விடயங்களை, மிகவும் துல்லியமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் கண்டுபிடித்து எழுதி வைத்தார்கள். இவர்களுக்கு இந்த அதிசயமான அபார சக்தி எப்படி வந்தது என்று உற்று நோக்கின், அவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட தூய்மையான தியானப் பயிற்சியினால் உள்ளே எடுக்கப் படாமல் செறிந்திருந்த சக்தியாற்றல் அலைகள் வெடித்தெழுந்து, ஒளியிலும் பல மடங்கு வேகத்தில் பயணம் செய்து, நம்மால் காண முடியாத பல விடயங்களை நேரில் கண்டு எழுதினார்கள் என்றுதான் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. "நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்" "ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
புதியது பழையவை

نموذج الاتصال