சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்

.

28 ஜனவரி 1882




இங்கிலாந்தை சேர்ந்த 

தி ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை எர்ரபாலு செட்டி (ஜார்ஜ் டவுன்) தெருவில் 1881ம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. 


அப்போது அதன் வாடிக்கையாளர்கள் 93 பேர் மட்டுமே. 


இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்தான். 


அவ்வாறு உருவான தொலைபேசி நிலையத்தின் மூலம் முதலாவது தொலைபேசி அழைப்பு கொடுக்கப்பட்டது. 


செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும், பிராட்வேயிலிருந்த Beehive Foundry என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த முதலாவது இணைப்பு கொடுக்கப்பட்டது.

பேசப்பட்ட நாள் ஜனவரி 28, 1882. 

அதற்கு அடுத்த ஆண்டுதான் அதாவது 1883ம் ஆண்டு இந்தியாவின் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளும் அஞ்சல் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

புதியது பழையவை

نموذج الاتصال