இறைவன் / இயற்கை நமக்காக அளித்திருக்கும் இந்த அரிய மனிதப் பிறப்பை_ _கொண்டாடுங்கள்..._ _உங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்..._ _எல்லா நேரங்களிலும் வெற்றியை நோக்கியே பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை..._ _சில நேரங்களில் வெற்றி பெறுவதை விட நிம்மதியே முக்கியம்..._ *காலத்தைப் போல் மிகப்பெரிய பொக்கிஷம் எதுவும் இல்லை...* *ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் மிகப்பெரிய பொக்கிஷம்..* _அதை தயவு செய்து கவலைகளால் வீணாக்காதீர்கள்..._ *நல்லதே நடக்கும்* _என்ற_ _நம்பிக்கையுடன் இருங்கள்._ _நிச்சயம் நல்லதே நடக்கும்... ஒரு பெரிய சந்தை. பல பேர் வந்து போகிற ஓர் இடம். அங்கே ஒருத்தன் பிச்சையெடுத்துக்கிட்டு நின்னுக் கிட்டிருந்தான். ரொம்ப காலமா அவன் அந்த ஒரே இடத்துலே நின்னுகிட்டே பிச்சையெடுத்துக்கிட்டிருந்தான். ஆனாலும் அவன் வாயைத் திறந்து பிச்சை போடுங்கன்னு யாரையுமே கேக்கறதில்லே! தினமும் காலையிலே வருவான். அந்த இடத்துலே நிப்பான். வலது கையை மட்டும் முன்னாடி நீட்டி ஏந்திகிட்டிருப்பான். வாயைத் திறந்து எதுவும் பேசறதில்லே. அந்த வழியா, வர்றவங்க போறவங்கள்லாம் அவன் கையிலே ஏதாவது காசு போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க. அந்த ஒரே இடத்துலே நின்னு ஒரு ஐம்பது வருஷமா அவன் பிச்சை யெடுத்துக்கிட்டிருந்தான். திடீர்ன்னு ஒருநாள் அவன் செத்துப் போயிட்டான். செத்துப் போயி அந்த இடத்துலேயே விழுந்துட்டான். ஊர் ஜனங்கள்லாம் பார்த்தாங்க! ஐயோ பாவம்! இப்படி அனாதையா விழுந்து செத்துப் போயிட்டானே-ன்னு பரிதாபப்பட்டாங்க! அந்த ஊர் மக்களுக்கு அவன் பேர்லே ரொம்ப அனுதாபம்! இவன் பிச்சையெடுத்துக்கிட்டிருந்தால் கூட இவன் ஒரு வித்தியாசமான ஆள். யாரையும் தொந்தரவு பண்றதில்லே. ஊர் மக்கள்லாம் ஒண்ணுகூடி ஒரு தீர்மானம் போட்டாங்க. இந்தப் பிச்சைக்காரனுக்கு இதே இடத்துலே ஒரு சிலை வைக்கணும் - அப்படின்னு! உடனே பணம் வசூலிக்க ஆரம்பிச்சாங்க. பலபேருங்க முன் வந்து தாராளமா மகரயாழ் பணம் கொடுத்தாங்க. நிறையப் பணம் சேர்ந்துபோச்சி. அந்த ஆள் நின்னுகிட்டிருந்த இடத்துலேயே அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சாங்க. ஒரு ரெண்டு அடி ஆழம் தோண்டியிருப்பாங்க... திடீர்ன்னு - ஒரு வித்தியாசமான சத்தம் - டங் டங் குன்னு கேட்டுது. அவசரம் அவசரமா தோண்டிப் பார்த்தாங்க! ஒரு செப்புக் குடம் தெரிஞ்சிது. எடுத்து அதுலே என்ன இருக்குன்னு பார்த்தாங்க. ஏராளமா தங்க நாணயம்- வெள்ளிக் காசு எல்லாம் இருந்தது. அதைப் பார்த்ததும் கூட்டத்துலே இருந்தவங்களுக்கு ரொம்ப ஆச்சரியம். ஒருத்தர் சொன்னார்; "பாத்தீங்களா? இந்தப் பிச்சைக்காரன் *தன்னோட* *காலுக்கு* *அடியிலேயே* *புதையல்* இருக்கறது தெரியாமே போறவங்க வர்றவங்க கிட்டே யெல்லாம் 'பைசா'வுக்கு கையேந்தி நின்னுக்கிட்டிருந்தே செத்துட்டான்!" அப்படின்னார், அப்ப- அந்த வழியா ஒரு துறவி வந்தார். கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்; "ஆமாம்! ஒவ்வொரு மனுஷனுமே இப்படித்தான் பண்ணிக்கிட்டிருக்கான்! தன்னோட *மனசுலே* *குவிஞ்சிருக்கிற* *திறமையையும்* , *மகிழ்ச்சியையும்* , *இன்பத்தையும்* தெய்வத்தை யும் அவன் புரிஞ்சிக்கிறதில்லே! அது வெளியே எங்கேயோ இருக்கறதா நினைச்சிக்கிட்டு - அதைத் தேடிக்கிட்டே காலம் பூராவும் கழிச்சுடறாங்க!'' அப்படின்னு சொல்லிபுட்டு அந்தத் துறவி போயிட்டார். கூட்டத்துலே இருந்தவங்க அதுக்கப்புறம்தான் சிந்திக்க ஆரம்பிச்சாங்களாம்.