கடவுள் எங்கே - தெய்வீக ரகசியங்கள்




மகான் ஒருவர் காட்டில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் அக்கரைக்குப் போக நினைத்தார். ஆற்றோரம் ஒரு படகு இருந்தது. அதில் படகோட்டியும் இருந்தான். மகான் படகில் ஏறினார். ஆறு மிக அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டி, மகானிடம், ""ஐயா!.... கடவுள் எங்கே இருக்கிறார்?.... அவரை எனக்குக் காட்ட முடியுமா?'' என்று கேட்டான். மகான் அவனைப் பார்த்துப் புன்னகையுடன், ""கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் அப்பா!..... அவர், இரக்கம், தயை, கருணை, அன்பு முதலிய குணங்களில் இருக்கிறார்.... இதோ!.... என் எதிரே இருக்கும் உன்னிடம் கூட நான் கடவுளைப் பார்க்கிறேன்!'' என்றார். படகோட்டிக்குப் புரியவில்லை. விழித்தான். அவனது குழப்பமடைந்த முகத்தைப் பார்த்த மகான், ""நேரம் வரும்போது புரியும்!'' என்றார். படகு ஆழமான பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது நல்ல மழை!.... திடீரென காற்றும் பலமாக வீசியது. படகு ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கவிழ்ந்தே விட்டது!..... மகானுக்கு நீச்சல் தெரியாது!.... அவர் படகிலிருந்து தவறி நீருக்குள் முழுகினார்!.... படகோட்டிக்குப் பதைபதைப்பாகிவிட்டது! உடனே அவன் நீரில் பாய்ந்தான். படகோட்டிக்கு நீச்சலில் திறமை அதிகம்! அனுபவமும் அதிகம்!.... மகானைக் காப்பாற்றி பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டான். மகான் கண்விழித்துப் பார்த்துவிட்டு, படகோட்டியிடம், ""மகனே!..... இப்போது புரிகிறதா?... உன் மனதில், நான் "எப்படிப் போனாலும் பரவாயில்லை'.... என நினைக்காமல், இரக்கத்தினால் நீரில் குதித்து என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்!.... அந்த இரக்க குணமே கடவுள்!.... பிறர் துன்பத்தைச் சகியாதவனிடத்திலும், இரக்கமுள்ள இதயங்களிலும், உயிர்களிடம் அன்பு கொண்டவர்களிடத்திலும் கடவுள் வசிக்கிறார்.... உன்னுள் இருக்கும் இரக்க சிந்தனையைத்தான் நாம் கடவுள் என்கிறோம்!....'' என்றார். இரக்கமுள்ள இதயமே கடவுளின் இருப்பிடம்!


1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் 2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் . 3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும் . 4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் . 5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் . 6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் . 7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் . 8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி ) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் . 9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும். அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் ) 10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது *தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.
புதியது பழையவை

نموذج الاتصال